Thursday, January 23, 2025
HomeLatest Newsநெடுஞ்சாலையில் கவிழ்ந்த பஸ் - 9 பேர் பலி...!

நெடுஞ்சாலையில் கவிழ்ந்த பஸ் – 9 பேர் பலி…!

துருக்கி நாட்டின் முஹ்லா மாகாணம் மர்மரிஸ் மாவட்டத்தில் இருந்து மெர்டின் மாகாணம் நோக்கி பஸ் சென்றுகொண்டிருந்தது.

மெர்சின் மாகாணம் யென்கஸ் பகுதியில் நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலைநடுவே இருந்த தடுப்புச்சுவர் மீது மோதி தலைகுப்பற கவிழ்ந்து விழுந்தது.

அந்த பஸ்சில் 39 பேர் பயணித்த நிலையில் விபத்தில் பஸ் பயணிகள் 9 பேர் உயிரிழந்தனர் மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News