Tuesday, December 24, 2024
HomeLatest Newsசாக்லேட்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்....! வாவ் சூப்பராக இருக்கு!

சாக்லேட்களால் அலங்கரிக்கப்பட்ட மணப்பெண்….! வாவ் சூப்பராக இருக்கு!

இன்றைய உலகில் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி அவர்களுடைய வாழ்க்கையில்  பல்வேறு விதமான நிகழ்வுகள் இடம்பெறுவது வழமை. இருப்பினும் அவற்றுள் முக்கிய நிகழ்வாக காணப்படுவது திருமணம் ஆகும்.


இந்நிலையில் திருமணம் எனும் நிகழ்விற்காக ஆண்களாயினும் சரி பெண்களாயினும் சரி தம்மை மேலும் அழகுபடுத்துவதற்காக பல்வேறு அழகு சிகிச்சை நிலையங்களுக்கு சென்று திருமணத்திற்காக தம்மை அழகுபடுத்துவார்கள்.

இவ்வாறனதொரு நிலையில் இந்தியாவில் மணப்பெண் ஒருவரை சாக்லெட்களால் அலங்காரம் செய்த சம்பவம் அனைவரையும் கவர்ந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

திருமண நிகழ்விற்காக மணப் பெண்ணிற்கு “chocolate hairdo” என்று அழைக்கப்படும் இந்த சிகை அலங்காரம், கிட் கேட், 5 ஸ்டார், மில்கிபார் மற்றும் ஃபெரெரோ ரோச்சர் போன்ற பல பிரபல சாக்லேட் பிராண்டுகளின் சாக்லேட்ஸ் மற்றும் டோஃபிஸ்களை சேர்த்து உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சாக்லெட்டுக்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்ட மணப்பெண் தொடர்பில் சமூகவலைத்தளங்களில் பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Recent News