Thursday, December 26, 2024
HomeLatest Newsஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தானில் குண்டு வெடிப்பு: 8 பேர் பலி!

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று இடம்பெற்ற சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 8 பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 18 ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குண்டுத் தாக்குதலுக்கு ‘இஸ்லாமிய தேசிய பயங்கரவாத அமைப்பு’ உரிமை கோரியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றதன் பின்னர் தீவிரவாதிகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாகவும், பல்வெறு இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் ஆப்கானிஸ்தானுக்குள் புகுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே அண்மையில் அல்-கெய்தா அமைப்பின் தலைவரை அமெரிக்கா இலக்கு வைத்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தலிபான்கள் மேற்கொண்ட தாக்குதல் நடவடிக்கைகளின் போது நான்கு தீவிரவாதிகள் கொல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

நேற்றைய குண்டு வெடிப்பில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் அப்பாவி பொதுமக்கள் என்றும் இந்த தாக்குதலை வன்மையாக கண்டிப்பதுடன் தாக்குதலுக்கு காரணமானவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் தலிபான் அரசு தெரிவித்துள்ளது.

Recent News