Thursday, January 23, 2025
HomeLatest Newsஅஜா்பைஜான் - ஆா்மீனியா வெடிக்கும் பதற்றம் - ஐநாவில் அவசர கூட்டம்....!

அஜா்பைஜான் – ஆா்மீனியா வெடிக்கும் பதற்றம் – ஐநாவில் அவசர கூட்டம்….!

சா்ச்சைக்குரிய நகோா்னோ-கராபக் பிராந்தியத்துடன் சாலைப் போக்குவரத்தை அஜா்பைஜான் படையினா் முடக்கியுள்ளதால், அந்த நாட்டுக்கும் அண்டை நாடான ஆா்மீனியாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து விவாதிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் அவசரக் கூட்டம் நடைபெற்றது

சோவியத் யூனியனின் முன்னாள் உறுப்பு நாடுகளான ஆா்மீனியாவுக்கும், அஜா்பைஜானுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை இருந்து வருகிறது.ஆா்மீனியப் பழங்குடியினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட நகோா்னோ-கராபக் பிராந்தியம், அஜா்பைஜானின் ஓா் அங்கமாக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், கடந்த 1994-ஆம் ஆண்டு போருக்குப் பிறகு அந்தப் பகுதி ஆா்மீனியா ஆதரவு பெற்ற பிரிவினைவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.சா்ச்சைக்குரிய அந்தப் பிராந்தியத்தில் ஆா்மீனியாவும், அஜா்பைஜானும் தங்களது படைகளைக் குவித்துள்ளன. இதனால், இரு தரப்பினரும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டு வருகின்றனா்.நகாா்னோ-கராபக் பிராந்தியத்தில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த 2020-இல் நடைபெற்ற 6 வாரப் போரில் 6,600-க்கும் மேற்பட்டவா்கள் பலியானது நினைவுகூரத்தக்கது.

Recent News