Monday, December 23, 2024
HomeLatest Newsசற்று முன் கிளம்பிய அனுரவின் படை – வெடித்தது மற்றுமொரு போராட்டம்!

சற்று முன் கிளம்பிய அனுரவின் படை – வெடித்தது மற்றுமொரு போராட்டம்!

அடக்குமுறை அரசாங்கத்தை விரட்டியடிப்போம் என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்துள்ள பாதயாத்திரை சற்று முன்னர் பேருவளையில் இருந்து ஆரம்பமாகியது.

குறித்த பேரணியில் ஏற்கனவே பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இணைந்துள்ளனர்.

பேரணியில் ஜே. வி. பியின் தலைவரும், நாடளுமன்ற உறுப்பினருமான அனுராகுமார திசநாயக்க இணைந்து கொண்டுள்ளதுடன், மூன்று மொழிகளிலும் எழுதப்பட்ட வாசங்கங்களை தாங்கியாவாறு பேரணி நகர்கிறது.

துரத்துவோம், 74 வருட சாபத்தை முடிப்போம், கொடூர ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் போன்ற வாசங்களை எந்தியவாறு மக்கள் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

மேலும் குறித்த போராட்டத்தின் தொடர்ச்சியாக, நாளைய தினம் வாத்துவ பகுதியிலும், நாளை மறுதினம் மொரட்டுவ பகுதியிலும் “திருட்டுக் கும்பலை விரட்டி அடிப்போம் ” என்ற தொனிப்பொருளில் இடம்பெறவுள்ளது.

Recent News