Thursday, May 9, 2024
HomeLatest Newsகாலி ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றிய பொலிஸார் – முழுமையாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

காலி ஆர்ப்பாட்டக்காரர்களின் கூடாரத்தை அகற்றிய பொலிஸார் – முழுமையாக விசாரிக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு!

காலியில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோரின் கூடாரத்தை அகற்றியமை தொடர்பில் முழுமையான விசாரணையை மேற்கொள்ளுமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு – காலி முகத்திடலுக்கு முன்பாக முன்னெடுக்கப்படும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில், நாட்டின் பல பகுதிகளில் ‘கோட்டா கோ கம’ கிராமக் கிளைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, காலி பேருந்து நிலையத்திற்கு முன்பாக அமைக்கப்பட்டிருந்த “கோட்டா கோ கம’ கூடாரங்கள், பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதாக தெரிவித்து பொலிஸாரால் இன்று காலை அகற்றப்பட்டது.

எனினும், பொலிஸாரின் கெடுபிடியை மீறி பொலிஸாரால் அகற்றப்பட்ட போராட்டக் கூடாரம் மீண்டும் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News