அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கன் நேற்று மத்திய கிழக்கு நாடுகளின் தலைவர்களை சந்தித்துள்ளார்.
இதன் போது பலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான போர் நிறுத்தம் தொடர்பான பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்டனி பிளிங்கனின் இந்தப் பயணத்தின் முதல் சந்திப்பாக அவர் லெபனான் பிரதமர் நஜிப் மிகடியை சந்தித்து காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.
இதேவேளை இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா பிரித்தானியா உள்ளிட்ட மேற்கு நாடுகள் அணி திரண்டுள்ளதோடு பலஸ்தீனக்கு ஆதரவாக ரஷ்யா சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்க தொடங்கியுள்ளன.
இந்த பதற்ற சூழ்நிலையை அமெரிக்காவின் வெளியுறவுத்துறை செயலாளர் அண்டனி பிளிங்கனுடனான பேச்சுவார்ததையின் மூலம் தணிக்க எதிர்பார்த்துள்ளதாக ஏனைய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.