Tuesday, December 24, 2024
HomeLatest Newsலத்தீன் அமெரிக்காவில் மேலும் ஒரு சீன உளவு பலூன் கண்டுபிடிப்பு

லத்தீன் அமெரிக்காவில் மேலும் ஒரு சீன உளவு பலூன் கண்டுபிடிப்பு

லத்தீன் அமெரிக்கா பகுதியில் மேலும் ஒரு சீன உளவு பலூன் பறந்து வருவதாக தங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது என்று அமெரிக்க ராணுவ தலைமையகம் பென்டகன் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக பென்டகன் கூறும்போது, லத்தீன் அமெரிக்காவில் பலூன் ஒன்று பறந்து வருகிறது. 

இது மற்றொரு சீன உளவு பலூனா என ஆய்வு செய்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது. 

மேலும் அமெரிக்காவில் பறக்கும் பலூன் மத்திய அமெரிக்காவில் கிழக்கு நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

அது சில நாட்களில் அமெரிக்க வான்பரப்பில் இருக்கும் என்று பென்டகன் தெரிவித்துள்ளது.

Recent News