Tuesday, December 24, 2024
HomeLatest News365 நாட்களும் மரதன் ஓடிய அசாதாரண மனிதர் - 53 வயதிலும் உலக சாதனை

365 நாட்களும் மரதன் ஓடிய அசாதாரண மனிதர் – 53 வயதிலும் உலக சாதனை

பிரித்தானியாவைச் சேர்ந்த விளையாட்டு ஆர்வலர் ஒருவர், 2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில்,இருந்து மரதன் ஓடி சாதனை படைத்துள்ளார்.

கடந்த ஆண்டு அவரால் எடுத்துக்கொள்ளப்பட்ட தீர்மானத்தில் வெற்றிபெற்றுள்ளார் “நான் ஆண்டின் 365 நாட்களும் வெற்றிகரமாக மரதன் ஓட்டுவேன்” என்ற அவரது புத்தாண்டுத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

இங்கிலாந்தின் கும்ப்ரியாவில் உள்ள கிளீட்டர் மூரைச் சேர்ந்த கேரி மெக்கீ(53), கடந்த ஆண்டு முதல் நாளில் இந்த சவாலை தொடங்கினார்.

இங்கிலாந்தின் மேக்மில்லன் கேன்சர் ஹெல்ப் மற்றும் வெஸ்ட் கும்ப்ரியா மருத்துவமனைகளுக்கு நிதி திரட்டுவதே அவரது நோக்கம்.

கடந்த 31 திகதி எல்லைக் கோட்டைத் தாண்டியதும், தனக்கு அன்பான வரவேற்பு அளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

பின்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் தொண்டுக்காக ரூ.10 கோடி பரிசு பெறும் இலக்கை அடைந்துவிட்டதாக அறிவித்துள்ளார்.

பார்வையாளர்களின் ஆரவாரத்துக்கு மத்தியில் கடைசி மரதனை காலை 8.30 மணிக்கு தொடங்கிய அவர், ஆரவாரத்துக்கு மத்தியில் பந்தய தூரத்தை மதியம் 2 மணிக்கு நிறைவு செய்தார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், “மழை பெய்தபோதும் சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு அவரை கைதட்டி ஆரவாரம் செய்தனர்.

எனக்காக மக்கள் திரண்டதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருந்தது. அது எப்போதும் என் நினைவில் இருக்கும். நான் தூரத்தைப் பற்றி பயப்படவில்லை, இது கடைசி பந்தயம் என்பதால் நான் பதட்டமாக இருந்தேன்.

இது ஒரு சிறந்த நாள். இது வெஸ்ட் கும்ப்ரியன் பிரச்சனை மட்டுமல்ல, நாட்டின் பிரச்சனை, ஏனெனில் புற்றுநோய் அனைவரையும் பாதிக்கும்,’’ என்றார்.

இது தொடர்பாக உலக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த ரசிகர்கள், “கேரி மெக்கீ காட்டிய உடல் மற்றும் மன வலிமை அளவிட முடியாதது.

2 பெரிய தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டியது மட்டுமின்றி, இந்த சவாலுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களையும் திரட்டி வியப்பான விடயத்தை செய்துள்ளார். கேரியின் சாதனைகளும் தன்னலமற்ற சேவையும் அளவிட முடியாதவை.

குறித்த தொண்டு நிறுவனத்திற்கு நிதி திரட்டுவதற்காக ஒரு அசாதாரண மனிதர் ஒவ்வொரு நாளும் மரதன் ஓட்டியுள்ளார். இதை அடைய எவ்வளவு சுய ஒழுக்கமும் திடமான சிந்தனையும் தேவை என்பதை ஒருவர் கற்பனை செய்து பார்க்க முடியும்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் எங்கள் தொண்டு நிறுவனத்திற்கு அவர் அளித்த ஆதரவிற்கு நாங்கள் மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். அதை வர்ணிக்க வார்த்தைகளே இல்லை” என தெரிவித்தனர்.

Recent News