Thursday, December 26, 2024
HomeLatest Newsகைபேசி வெடித்து 8 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை!

கைபேசி வெடித்து 8 மாதக் குழந்தைக்கு ஏற்பட்ட நிலை!

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் அதிக நேரம் சார்ஜ் ஏற்றப்பட்ட செல் போன் வெடித்து சிதறியதில் 8 மாத பெண் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

சம்பவத்தன்று வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சூரிய ஒளி மின்சாரம் இணைப்பின் மூலம் செல்போனுக்கு தந்தை சார்ஜ் ஏற்றியபடி அதனை குழந்தை தூங்கிய கட்டிலில் வைத்துள்ளார் .

எல்லோரும் அயர்ந்து தூங் கிக் கொண்டிருந்த போது திடீரென்று பலத்த சத்தத்துடன் செல்போன் வெடித்து சிதறியது . இதனால் படுக்கை தீப்பற்றி எரிந்தது . இதனால் பச்சிளம் பெண் குழந்தை 30 சதவீத தீக்காயம் அடைந்த நிலையில் பெற்றோர் மருத்துவமனையில் அனுமதித்தனர் .

அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

Recent News