Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsபிரிகோஜினை தொடர்ந்து மற்றுமொருவர் மரணப்படுக்கையில் - புடினுக்கு அடுத்தடுத்து சிக்கல்..!

பிரிகோஜினை தொடர்ந்து மற்றுமொருவர் மரணப்படுக்கையில் – புடினுக்கு அடுத்தடுத்து சிக்கல்..!

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு மிக நெருக்கமான வாக்னர் கூலிப்படை தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் கொல்லப்பட்ட நிலையில், தற்போது புடினின் இன்னொரு கூட்டாளியான செச்சென் தலைவர் மரணப்படுக்கையில் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

விளாடிமிர் புடினின் மிக நெருக்கமான கூட்டாளியும் கொடூரமான போர்த் தலைவனுமான ரம்ஜான் கதிரோவ் மிக ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது.

உக்ரைனுக்கு எதிராக ஆயிரக்கணக்கான படை வீரர்களை ரஷ்யாவுக்கு அனுப்பி வைத்த 46 வயதான ரம்ஜான் கதிரோவ், தற்போது கோமாவில் இருப்பதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி, அவருக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு மாஸ்கோவில் இருந்து அவரது பிராந்திய தலைநகர் க்ரோஸ்னிக்கு சிறுநீரக நிபுணர்கள் அனுப்பப்பட்டதாக நம்பப்படுகிறது.

Recent News