Saturday, January 11, 2025
HomeLatest Newsஇராணுவ பயிற்சியின் போது சாகசம் செய்த விமானங்கள்..!இறுதியில் நேர்ந்த துயர்…!

இராணுவ பயிற்சியின் போது சாகசம் செய்த விமானங்கள்..!இறுதியில் நேர்ந்த துயர்…!

இராணுவ வீரர்களின் விமானப்படை பயிற்சியின் பொழுது நேருக்கு நேர் விமானம் மோதியதில் விமானி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கொலம்பியாவின் அபியாய் பகுதியில் அமைந்துள்ள விமானப்படை தளத்தில் இராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அதன் பொழுது, வானில் சாகசம் செய்த இரு விமானங்கள் விமானியின் கட்டுப்பாட்டை இழந்து நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரு விமானங்களும் சுக்குநூறாக நொறுங்கி கீழே விழுந்துள்ளன.

ஆயினும், இந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகமல் இருந்துள்ளது.

இந்நிலையில், இரு விமானங்களும் மோதி கீழே விழும் காட்சிகள் குறித்த காணொளி சமூகவலைதளங்களில் வைரலாகியமையால் இந்த விபத்திற்கான காரணம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

அதையடுத்து, விமானி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டாவது விமானத்தில் பயணித்த விமானி அதிசயமாக உயிர் பிழைத்த நிலையில், படுகாயங்களுடன் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent News