Saturday, April 20, 2024
HomeLatest Newsகொழும்பு அரசியலில் மீண்டும் அதிரடித் திருப்பம்: அரியாசணம் ஏறும் ராஜபக்சக்கள்!

கொழும்பு அரசியலில் மீண்டும் அதிரடித் திருப்பம்: அரியாசணம் ஏறும் ராஜபக்சக்கள்!

ராஜபக்சாக்களில் ஒருவரை பிரதமராக நியமிப் பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள் தொடர்ந்தும் கலந்துரையாடப்படுவதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. .

அதேவேளை நவம்பரில் அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு முன்னர் புதிய பிரதமரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தக் கட்சிக்குள் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அல்லது முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச ஆகியோரில் ஒருவரை பிரதமராக நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கட்டியெழுப்ப வேண்டுமாயின் அரசாங்கத்தின் பலத்தை தமது கட்சியின் கீழ் கொண்டு வரவேண்டும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது .

இதற்கமைய தற்போது பிரதமராக பதவி வகிக்கும் தினேஸ் குணவர்தனவை பதவி விலகச்செய்து அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு திட்டமிடப்பட்டு வருவதாக கூறப்படுகின்றது .

இவ்வாறான நிலையில் எதிர்வரும் மாதத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாடு நடைபெறவுள்ள நிலையில் . அதன்போது அறிவிக்கப்படும் கட்சியை கட்டியெழுப்புவது தொடர்பாக எடுக்கப்படும் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

Recent News