நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலையின் தீவிரத் தன்மையினை அடுத்து வீதியில் இறங்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டதுடன் அவற்றின் விளைவாக பாரிய மக்கள் போராட்டத்தையடுத்த, தான் ஜூலை 13 ஆம் திகதியுடன் பதவி விலகுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த 9 ஆம் திகதி சபாநாயகருக்கு அறிவித்திருந்தார்.
இவ்வாறான நிலையில் பல்வேறு அரசியற் திருப்பு முனைகளுக்கு மத்தியில் புதிய ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றார்.
அதேவேளை மக்கள் புரட்சியினை அடுத்து நாட்டைவிட்டு வெளியேறிய கோட்டபாய கடந்த சில வாரங்களாக சிங்கப்பூரில் தங்கிருந்த நிலையில் தற்போது அவர் தாய்லாந்து சென்றடைந்துள்ளார்.
இந்நிலையில் முன்னாள் ஜனாதிபதியை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துமாறு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதேவேளை பல்வேறு நாடுகளிலும் உள்ள அமைப்புக்களும் கோட்டபாயவுக்கு எதிராகநடவடிக்கை எடுக்குமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர்.
இவ்வாறான சூழலில் கோட்டா இலங்கைக்கு வந்துதான் தீரவேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. அதற்கு பல காரணங்கள் உள்ளன.சாதாரணமாக ஒரு அரச தலைவனுக்கு உலக நாடுகளுடன் பல தொடர்புகள் இருக்கும் .உலக அரச தலைவர்களுக்கு மத்தியில் ஒரு அரச தலைவனுக்கு சிறந்த செல்வாக்கு காணப்படும்.சுருக்கமாக சொன்னால் வெளிநாட்டு தலைவர்களுடனான தொடர்பு அதிகமாக இருக்கும் .அப்படியான தலைவர் வெளிநாடுகளுக்கு செல்வதில் எந்தவிதமான பிரச்சனைகளும் ஏற்படபோவதில்லை.
அவருடைய வருகையை எந்த நாட்டு தலைவராக இருந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் .ஆனால் கோட்டாபயராஜபக்ஷ் அவ்வாறு அல்ல .அவரது வெளிநாட்டு உறவு என்பது மட்டுப்படுத்தப்பட்ட உறவாகத்தான் இருந்திருக்கிறது .வெளிநாட்டு அரச தலைவர்களுடனான உறவு என்பது கோட்டாபாயவுக்கு ஒரு சிக்கலான விடயமாகத் தான் இருந்திருக்கிறது .
ஜூலை 9 ஆம் திகதிக்குப் பிறகு ,ஆரம்பத்தில் கோட்டாபயராஜபக்ஸவுக்கு அமெரிக்காவிற்கு செல்வதற்குத் தான் தயாரானார்.ஆனால் அமெரிக்காவும் அவருடைய விசாவினை இரத்து செய்தது. பிறகு நெருங்கிய நண்பனான இந்தியாவிற்கு செல்ல தயாரானார் .இருப்பினும் இந்தியாவும்அவருடைய வருகையை தடுத்து நிறுத்தியது .அதைத்தொடர்ந்து தான் சிங்கப்பூரிற்கு சென்றார் ,சிங்கப்பூரிலும் அவரால் ஒரு மாதத்திற்கு மேலே தாக்குப் பிடிக்க முடியவில்லை.
தற்போது கூட ரணில் விக்கிரமசிங்கவினுடைய உதவியினை கொண்டு தான் தாய்லந்திற்கும் சென்றுள்ளார் .எனவே இதிலிருந்து புலப்படும் மிக முக்கிய விடயம் கோடராஜபக்ஸவினுடைய வெளிநாட்டு தொடர்புகள் மிகவும் பலவீனமான தொடர்புகளாகும் .
இதனடிப்படையில் நிச்சயமாக கோட்டா இலங்கைக்கு வந்தே தீருவார் .நெடு நாட்களுக்கு அவரால் வெளிநாடுகளில் வாழ்வதற்கு முடியாது ,எனவே அவர் இலங்கைக்கு வருவதாக இருந்தால் கைது செய்யப்படாமல் இருப்பதற்கும் ,ராஜபக்ஷ சொத்துக்கள் பாதுகாக்கப்படுவதற்கும் ,வழக்குகள் தொடரப்படாமல் இருப்பதற்கும் அவருக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.
இதற்காக தேசியப்பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு உள்ளே கோட்டா நுழைவார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பாராளுமன்றத்திற்குள் கோட்டபாய உள்நுழைந்தவுடன் அவருக்கு பிரதமர் பதவி வழங்கப்படக்கூடிய வாய்ப்புக்கள் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உண்மையிலேயே ரணிலினை பொதுஜன பெரமுன நன்றாகவே பயன்படுத்திக்கொள்கிறார்கள் .
மறுபுறம் பொதுஜன பெரமுனவில் பல்வேறு மாற்றங்களை செய்வதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கபட்டு வருகின்றது.
இவ்வாறான நிலையில் மீண்டும் ராஜபக்சக்களின் கைகள் மீண்டும் ஓங்குவதற்கு மக்கள் மீண்டும் இடம்கொடுப்பார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.