இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த சிறுமி ஒருவரின் தனித்துவமான திறமை குறித்து தற்போது உலகின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
அவரது திறமை மேதைகளான எல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங் ஆகியோரின் IQ ஐ மிஞ்சுவதாக தெரியவிக்கப்படுகின்றது.
சிறுமியின் தனித்துவம்
அரியானா தம்பரவா ஹெவகே என்ற சிறுமி இந்த தனித்துவமான திறமையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் தற்போது 10ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியாகும்.
அரியானா தனது பெற்றோருடன் பிரித்தானியா – Huddersfield பகுதியில் வாழ்ந்து வருகின்றார். Huddersfield உள்ள செயின்ட் பேட்ரிக் கத்தோலிக்கப் பாடசாலையில் படிக்கும் அரியானா, நேற்று நடந்த மென்சா IQ தேர்வில் 162 புள்ளிகளைப் பெற்றுள்ளார்.
அதற்கமைய, இது ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹொக்கிங்கின் மதிப்பிடப்பட்ட IQ 160 ஐ விட அதிகமாக உள்ளது.
இலங்கையின் மாத்தளையை பிறப்பிடமாக கொண்ட அரியானாவின் குடும்பத்தினர் 2009 ஆம் ஆண்டு பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்தனர்.
இந்த நிலை பிரபல விஞ்ஞானி ஆவதே தனது நம்பிக்கை அரியானா ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
பிற செய்திகள்
- இந்த ராசிக்காரர்கள் காதலில் Break Up செய்ய மாட்டார்களாம்..!
- அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டித்தரும் மதுபானம்..!
- இலங்கையில் ஒன்லைனில் பொருட்கள் விற்பனை செய்பவர்களுக்கு எச்சரிக்கை!
- ஹன்சிகா திருமணத்திற்கு உலோகத்தில் அழைப்பிதழ்! எப்படி இருக்கிறது தெரியுமா?
- வௌிநாட்டு இனிப்பு வகைகள் – இலங்கையர்களுக்கு வெளியான அதிர்ச்சித் தகவல்