Saturday, January 25, 2025
HomeLatest Newsஇலங்கையை சேர்ந்த 310 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளிப்பு

இலங்கையை சேர்ந்த 310 பேரை ஏற்றிச் சென்ற கப்பல் பிலிப்பைன்ஸ் கடலில் தத்தளிப்பு

இதேவேளை 310 இலங்கை அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் காற்றினால் தாக்கப்பட்டு, பிலிப்பைன்ஸ்  மற்றும் வியாட்நாமுக்கு இடையே மூழ்கிக் கொண்டிருப்பதாக குரல் பதிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இதனை தொடர்ந்து கப்பலில் தத்தளித்து கொண்டிருக்கும் 310 இலங்கையர்களையும் காப்பாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்த  விடயம் இலங்கை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக குழந்தைகள் பெண்கள் சுமார் 40 பேர் உள்ளதாகவும் மொத்தமாக 310 பேர் உள்ளதாகவும் அனைவரும் இலங்கையர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது 310 பேரையும் காப்பாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பிலிப்பைன்ஸ் கடற்படையுடன் தொடர்புகொள்ளப்பட்டுள்ளதாகவும் அனைவரையும் பயமின்றி இருக்குமாறு குறித்த குரல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகள் விரைவில்

பிற செய்திகள்

Recent News