Monday, January 27, 2025
HomeLatest Newsபூமியை தாக்க வரும் செயற்கைகோள்-உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

பூமியை தாக்க வரும் செயற்கைகோள்-உதிரிபாகங்கள் மனிதர்கள் மீது விழுமா?

பல ஆண்டுகளுக்கு அனுப்பப்பட்ட அமெரிக்காவின் செயற்கைகோள் காலவதியாகி செயலிழந்து தற்போது ஆசிய, ஆப்பிரிக்கா நாடுகளின் மீது விழ வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

38 ஆண்டுகள் பழமைவாய்ந்த நாசா செயற்கைக்கோள் தற்போது செயலிழந்துள்ளது. அந்த செயற்கைகோள் விண்ணில் இருந்து பூமிக்கு விழ உள்ளது. இந்நிலையில், செயற்கைகோளின் உதிரிபாகங்கள் மனிதர்கள் வசிக்கும் பகுதியில் விழுந்துவிடுமோ என்ற அச்சம் நிலவியது. ஆனால், அதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு என்று நாசா நேற்று தெரிவித்துள்ளது.

5,400 பவுண்டு (2,450 கிலோ) செயற்கைக்கோளில் பெரும்பாலானவை மீண்டும் பூமிக்கு நுழைந்தவுடன் எரிந்துவிடும் என்று நாசா தெரிவித்துள்ளது. ஆனால் சில துண்டுகள் எரியாமல் பூமியில் விழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இடிபாடுகள் விழுந்து மனிதர்களுக்கு காயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என விண்வெளி நிறுவனம் வைத்துள்ளது. இந்த அறிவியல் ஆய்வு சார்ந்த செயற்கைக்கோள் வரும் ஞாயிற்றுக்கிழமை (நாளை) இரவு வந்துவிழும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு சுமார் 17 மணிநேரம் எடுக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அந்த செயற்கைகோள் திங்கட்கிழமையில் தான் விழும் என கலிஃபோர்னியாவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் கணித்துள்ளது. ஆப்பிரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு, வடக்கு மற்றும் தென் அமெரிக்காவின் மேற்குப் பகுதிகள் வழியாக செல்லும் பாதையில் 13 மணிநேரம் எடுக்கும் எனவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

ERBS எனப்படும் புவி கதிர்வீச்சு பட்ஜெட் செயற்கைக்கோள் (Earth Radiation Budget Satellite) 1984ஆம் ஆண்டு சேலஞ்சர் என்ற விண்கலத்தில் ஏவப்பட்டது. அதன் எதிர்பார்க்கப்பட்ட ஆயுட்காலம் இரண்டு வருடங்கள் என்றாலும், செயற்கைக்கோள் 2005ஆம் ஆண்டில் ஓய்வு பெறும் வரை ஓசோன் மற்றும் பிற வளிமண்டல அளவீடுகளை செய்து கொண்டே இருந்தது. பூமி சூரியனில் இருந்து ஆற்றலை உறிஞ்சி கதிர்வீச்சை உண்டாக்குகிறது என்பதை செயற்கைக்கோள் ஆய்வு செய்தது.

சேலஞ்சர் நிறுவனத்திடம் இந்த செயற்கைக்கோள் சிறப்பு திட்டத்தின்கீழ் அனுப்பியுள்ளது. விண்வெளிக்குச் சென்ற அமெரிக்காவின் முதல் பெண்ணான , சாலி ரைடு, தனது விண்கலனின் இயந்திர கையை பயன்படுத்தி ERBS செயற்கைகோளை அதன் சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தியது குறிப்பிடத்தக்கது.

Recent News