Thursday, January 23, 2025
HomeLatest Newsவடக்கில் 551 மாணவர்கள் '9ஏ' சித்தியை பெற்று சாதனை!

வடக்கில் 551 மாணவர்கள் ‘9ஏ’ சித்தியை பெற்று சாதனை!

2021ஆம் ஆண்டின் க.பொ.த சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேற்றின் அடிப்படையில் வடக்கு மாகாணத்தில் 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தர சித்தியை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

வடக்கு மாகாணத்தில் இருந்து 16 ஆயிரத்து 564  மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையிலேயே 551 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரத்தில் சித்தியை பெற்றுள்ளனர்.

இதில் யாழ்ப்பாணம் கல்வி வலயத்தில் 3,009 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றிய நிலையில் 193 மாணவர்கள் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரத்தில் சித்தியடைந்துள்ளனர்.

இதில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மாணவிகள் 64 பேரும், யாழ். இந்துக் கல்லூரி மாணவர்கள் 62 பேரும் 9 பாடங்களிலும் ‘ஏ’ தரச் சித்தியை பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News