Thursday, May 2, 2024
HomeLatest Newsஇந்தியா – பாகிஸ்தான் மோதலால் அயல்நாடுகள் பாதிப்பு! வெளிவிவகார அமைச்சர்

இந்தியா – பாகிஸ்தான் மோதலால் அயல்நாடுகள் பாதிப்பு! வெளிவிவகார அமைச்சர்

பிராந்தியத்தில் உள்ள முக்கிய நாடுகளுக்கு இடையேயான அதிகாரப் போட்டி, தெற்காசிய நாடுகளை பெரிதும் பாதித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட அவர், அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யாமல் தெற்காசிய நாடுகள் முன்னேற முடியாது என கூறியுள்ளார்.

உலகளாவிய ரீதியில், ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மத்திய கிழக்கு போன்றன ஒரு பிராந்தியமாக ஒன்றிணைந்து வளர்ச்சியடைவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை நடத்தி ஒருமித்த கருத்துக்கு வர வேண்டும் என்றும் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அலி சப்ரி கேட்டுகொண்டுள்ளார்.

தங்களுடைய வேறுபாடுகளை ஒதுக்கி வைத்துவிட்டு ஒரு பொதுவான திட்டத்தில் செயல்பட்டால், அது பிராந்தியத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் பயனளிக்கும் என்றும் அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

Recent News