Monday, April 29, 2024
HomeLatest Newsஇன்று பூமியை கடக்கும் ராட்சத விண்கல்...!நாசா தகவல்..!

இன்று பூமியை கடக்கும் ராட்சத விண்கல்…!நாசா தகவல்..!

இன்றைய தினம் ராட்சத விண்கல் ஒன்று பூமியை கடந்து செல்லவுள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி கழகமான நாசா தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 2013 டபிள்யூ வி.44 என்ற விண்கல்லே இவ்வாறு கடந்து செல்லவுள்ளது.

298 அடி அகலம் கொண்ட இந்த விண்கலிற்கு 2013 டபிள்யூ வி.44 என்று நாசா பெயரிட்டுள்ளதுடன் தொடர்ந்தும் கண்காணித்து வருகின்றது.

இந்த விண்கல்லை 2013 ஆம் ஆண்டு நாசா கண்டு பிடித்ததுள்ள நிலையில், இது ஒலியின் வேகத்தை விட 34 மடங்கு வேகத்தில் வினாடிக்கு 11.8 கி.மீ வேகத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விண்கல் இந்திய நேரப்படி இன்று பிற்பகலில் பூமிக்கு மிக அருகில் வந்து பூமியில் இருந்து 33 லட்சம் கிலோ மீட்டர் தொலைவிற்குள் கடந்து செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும், ராட்சத விண்கல் கடப்பதால் பூமிக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Recent News