Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsதயாராகி வரும் மிதக்கும் நகரம் - இத்தனை வசதிகளா..?

தயாராகி வரும் மிதக்கும் நகரம் – இத்தனை வசதிகளா..?

இலங்கைக்கு தென்மேற்கே 1,000 கிலோமீட்டர் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள மாலத்தீவு கூட்டத்தின் 80 சதவீத நிலப்பரப்பு தாழ்வான பகுதிகளில் அமைந்துள்ளன, எனவே 2100ம் ஆண்டுக்குள் மாலத்தீவு நீரில் மூழ்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் , சுமார் 7000 வீடுகள் தனித்துவமான வசதிகளுடன் மாலத்தீவில் ஆச்சரியமூட்டும் மிதக்கும் நகரம் தயாராகி வருகிறது.

இந்த திட்டத்தை மாலத்தீவு அரசும், டச்சு ரியல் எஸ்டேட் டெவலப்பர் டாக்லாண்ட்ஸும் இணைந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2024ம் ஆண்டில் இந்த பணி நிறைவடையும் எனவும், அதனை தொடர்ந்து மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மிதக்கும் நகரத்தில் சுமார் 2 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 7000 வீடுகள், உணவகங்கள், கடைகள், பள்ளிகள், ஹோட்டல்கள் இந்த புதிய மிதக்கும் நகரத்தில் முதலில் அமையவுள்ளது.

இந்த புதிய மிதக்கும் நகரத்தின் கட்டிடங்கள் தரையில் கட்டப்பட்டு, பின் தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு கடல் நீரில் நிலைநிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த நிலத்தை போலவே இங்கும் சட்டபூர்வமான அதிகாரங்கள், பட்டாக்கள், வீட்டை வாங்கும், விற்கும் உரிமைகள் எல்லாம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மிதக்கும் நகரங்கள் அடியில் கடற்பாசிகள் மற்றும் பவளப்பாறைகள் நல்ல முறையில் வளரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இங்கு சூரிய ஒளி மற்றும் கடல் அலைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.

சுத்திகரிக்கப்பட்ட கடல் நீர் விநியோகம் செய்யப்படுவதுடன், போக்குவரத்திற்கு மின்சார ஸ்கூட்டர், சைக்கிள் போன்றவை பயன்படுத்தப்படுகின்றன.

Recent News