Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉருத்திரபுரீசுவரர் ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு...!

உருத்திரபுரீசுவரர் ஆலய ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு அழைப்பு…!

கிளிநொச்சி உருத்திரபுரீசுவரர் ஆலயத்தின் மீது, தொல்பொருளியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படவுள்ள ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்துவதற்காக எதிர்வரும் மே 18ம் திகதி காலை ஆலய அறங்காவலர் சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள  மக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் மத மற்றும் கட்சி வேறுபாடுகளற்று அனைத்துத் தரப்பினரையும் இணைந்துகொள்ளுமாறு ஆலய நிருவாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆலய வளாகத்தினுள் தொல்பொருள் சின்னங்கள் இருப்பதாகவும், அவ்விடத்தை எல்லைப்படுத்தும் வேலைகளை எதிர்வரும் 18ம் திகதி மேற்கொள்ளப்போவதாகவும் கரைச்சிப் பிரதேச செயலாளரால் ஆலய நிருவாகத்தினருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதன் அடிப்படையிலேயே இவ் எதிர்ப்புப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2021.03.22 ஆம் திகதி தொல்பொருள் திணைக்களத்தினர் அளவீட்டுப் பணிகளை மேற்கொள்ள
முனைந்தபோது, ஆலய நிருவாகத்தினர், பொதுமக்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இணைந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியதோடு, அளவீட்டில் ஈடுபட வந்த அதிகாரிகளையும், பொலிசாரையும் அங்கிருந்து வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Recent News