இரண்டு தசாப்தங்களாக ரஷ்யாவிற்குள் நடந்த மிகக் கொடூரமான தாக்குதலில் தற்போது மாஸ்கோவில் நடந்த தாக்குதல் காணப்படுகிறது , குறித்த தாக்குதலில்ன் ஏராளமான மக்கள் தானியங்கி ஆயுதங்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர் . இதன்காரணமாக இன்றைய நாளை ரஷ்யா துக்கநாளாக அறிவித்து ரஷ்யா கோடியை அரைக்கம்பத்தில் பறக்கவிட்டது .
இந்த கொடூர தாக்குதலில் மூன்று குழந்தைகள் உட்பட 133 பேர் இறந்தனர், மேலும் 150 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், தாக்குதலின் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டுபிடித்து தண்டிப்பதாக உறுதியளித்த பின்னர் ஜனாதிபதி விளாடிமிர் புடின் தேசிய துக்க தினத்தை அறிவித்தார்.”தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் எனது ஆழ்ந்த, இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று புடின் சனிக்கிழமையன்று தேசத்திற்கு ஒரு உரையில் கூறுகிறார்,
வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு is பொறுப்பேற்றது, ஆனால் தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பாக பயங்கரவாத குழுவை புடின் பகிரங்கமாக குறிப்பிடவில்லை,இந்த தாக்குதலில் எந்தப் பங்கையும் உக்ரைன் பலமுறை மறுத்துள்ளது,இது புடின் “சர்வதேச பயங்கரவாதம்” என்றும் குற்றம் சாட்டியது.”