Saturday, April 27, 2024
HomeLatest NewsWorld Newsமாஸ்கோ தாக்குதலுக்கு தொடர்பு இல்லை - ஜெலன்ஸ்கி தெரிவிப்பு..!

மாஸ்கோ தாக்குதலுக்கு தொடர்பு இல்லை – ஜெலன்ஸ்கி தெரிவிப்பு..!

மாஸ்கோவில் நடந்த தாக்குதலில் தங்களுக்கு தொடர்பு இல்லை என்று
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார் .மாஸ்கோவில் என்ன நடந்தது என்பது வெளிப்படையானது. இந்த தாக்குதலுக்கு புதினும், மற்றவர்களும் எங்கள் மீது குற்றம்சாட்ட முயற்சிக்கிறார்கள். அவர்களின் முறைகள் எப்போதும் ஒரே மாதிரியானவை. அதையெல்லாம் முன்பே பார்த்திருக்கிறோம். எப்போதும் மற்றவர்களை குறை கூறுவார்கள் . அவர்கள் மக்களை சித்ரவதை செய்து கற்பழிக்கிறார்கள்-பின்னர் எங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். எங்களுக்கு எதிராக போரை நடத்துகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் சொந்த நாட்டிற்குள் என்ன நடக்கிறது என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.என மேலும் விசனம் தெரிவித்தார்

ரஷிய குடிமக்களை பற்றி பேசுவதற்குப் பதிலாக, இத்தாக்குதலை உக்ரைனுடன்
எவ்வாறு இணைப்பது என்று யோசித்து புதின் ஒரு நாள் அமைதியாக இருந்தார்.
உக்ரேனிய மண்ணில் தற்போது கொல்லப்படும் நூறாயிரக்கணக்கான ரஷ்ய துருப்புக்கள் அவர்களுடைய நாட்டில் இருந்திருந்தால் நிச்சயமாக பயங்கரவாதிகளை தடுத்திருக்க முடியும்.

புதின் தனது தனிப்பட்ட அதிகாரத்திற்காக இந்த சூழ்நிலைகளில் அதிகமானவற்றைப் பயன்படுத்த முயற்சிப்பார். தீவிரவாதிகள் எப்போதும் தோற்க வேண்டும் என்றார்.

Recent News