சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாகூப்பின் 6 ஆண்டு பதவி காலம் வருகிற செப்டம்பர் 13-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து சிங்கப்பூர் அதிபர் தேர்தல் செப்டம்பர் 1-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் மீண்டும் போட்டியிட போவதில்லை என்று தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அறிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான தர்மன் சண்முகரத்னம், கேபினட் மந்திரி பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த ஜூன் மாதம் அறிவித்தார். இதையடுத்து சீன வம்சாவளியை சேர்ந்தவரும் சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியான் ஆகியோரும் அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் 3 பேர் இடையே கடும் போட்டி நிலவுகிற நிலையில் தர்மன் சண்முக ரத்னம் வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் சிங்கப்பூரில் அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் இதில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.