உக்ரைன் மோதலில் ரஷ்யாவின் ஈடுபாடு ஆயுத விநியோகங்களை தாமதப்படுத்தக்கூடும் என்ற கவலைகள் இருந்தபோதிலும், ஆர்டர் செய்யப்பட்ட எஸ் 400 விமான எதிர்ப்பு அமைப்புகளை கால அட்டவணையில் வழங்குவதாக ரஷ்யா இந்தியாவுக்கு உறுதியளித்துள்ளது.
இந்தியாவானது ரஷ்யாவின் ஒரு பெரிய ஆயுத இறக்குமதியாளராக உள்ளதோடு வழக்கமான ஆயுதங்களுக்கு ரஷ்ய தொழில்நுட்பத்தை பெரிதும் நம்பியுள்ளது.
எஸ் – 400 ட்ரையம்ஃப் வான் பாதுகாப்பு அமைப்பு 2018 ஆம் ஆண்டில் இந்தியாவால் 5.4 பில்லியன் டாலருக்கு வாங்கப்பட்டது. ஏற்கனவே மூன்று அலகுகள் வழங்கப்பட்டன. மேலும் இரண்டு எதிர்பார்க்கப்படுகின்றன.
இந்தியா தனது இறக்குமதியை பல்வகைப்படுத்துகிறது என்றாலும், ரஷ்ய ஆயுதங்களின் கையகப்படுத்துதல்களில் கணிசமான பகுதியை இன்னும் கொண்டுள்ளது, அந்த வகையில் 2017 முதல் மொத்த இறக்குமதியில் 8.5 பில்லியன் டாலர் ரஷ்ய ஆயுதங்களுக்காக செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது