Wednesday, December 25, 2024
HomeLatest Newsதிடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்...!அச்சமடைந்த மக்கள்..!

திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறிய ஆற்று நீர்…!அச்சமடைந்த மக்கள்..!

ஆற்று நீர் திடீரென இரத்த சிவப்பு நிறமாக மாறிய காரணத்தால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.

ஜப்பான் நாட்டின் ஒக்கினாவா தீவுப்பகுதியில் உள்ள நாகோ நகரில் அமைந்துள்ள துறைமுகப் பகுதியிலுள்ள ஆற்று நீரே திடீரென செந்நிறமாக மாறியுள்ளது.

அந்த வகையில், வழக்கமாக நீல நிறத்தில் தெட்ட தெளிவாக காணப்படும் இந்த பகுதி நீரானது செந்நிறமாக மாறியதால் அப்பகுதி மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் அருகில் உள்ள பீர் தயாரிப்பு தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு காரணமாகவே, அந்த ஆற்று நீர் செந்நிறமாக மாறியது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து, இது குறித்து பீர் தயாரிப்பு நிறுவனமான ஓரியன் ப்ரூவரிஸ் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், உணவுகளில் பயன்படுத்தப்படும் வண்ண சாயம் ஆற்றில் கசிந்ததால் தண்ணீரின் நிறம் மாறியதாக கூறப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News