Wednesday, December 25, 2024
HomeLatest Newsபஞ்சத்தில் வாடும் பிரிட்டன் மக்கள்..!ஏழு பேரில் ஒருவர் பட்டினி..!ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

பஞ்சத்தில் வாடும் பிரிட்டன் மக்கள்..!ஏழு பேரில் ஒருவர் பட்டினி..!ஆய்வில் அதிர்ச்சித் தகவல்..!

பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏழு பேரில் ஒருவர் பட்டினியாக இருப்பதாகவும் ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது.

இது குறித்து சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் IDS அமைப்பு மேற்கொண்ட ஆய்வில், பிரிட்டனில் 14 சதவீத மக்கள் உணவு பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கு உணவினை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே சமத்துவம் இன்மை அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால், அந்த பிரச்சினையை 10 ஆண்டுகளாக சரி செய்வதற்கு தொண்டு நிறுவனங்கள் முயற்சித்து வருவதானதும் நீண்ட கால தீர்வு அல்ல என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆண்டுகளுக்கு முன்னர் 100 உணவு வங்கிகள் மட்டுமே சேவை செய்த நிலையில், 2021 ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,000 ஆக அதிகரித்ததாகவும் 2022 செப்டம்பர் புள்ளிவிவரப்படி 97 லட்ச மக்கள் உணவு பஞ்சத்திற்கு ஆளாகியுள்ளதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், அங்கு பட்டினி பிரச்சனை என்பது தற்போது இயல்பான ஒன்றாக மாறிவிட்டதாகவும் அந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

இது இவ்வாறிருக்க, அந்நாட்டில் ஏழு பேரில் ஒருவர் பட்டினியாக இருப்பதாக டிரசல் டிர்ஸ்ட் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும், மொத்த மக்கள் தொகையில் 7 சதவீதமானோர் தொண்டு அமைப்புகளையே உணவுக்காக சார்ந்து இருப்பதாகவும் புள்ளி விபரம் காட்டி நிற்கின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News