Wednesday, December 25, 2024

எலிகளை பிடிக்கும் வேலை…!ஒரு கோடியே 30 லட்சம் சம்பளம்…!வாய் பிளக்கும் மக்கள்…!

அமெரிக்காவில் எலிகளின் தொல்லை அதிகரித்துள்ளதால் அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒரு கட்டமாக எலிகளை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் வணிக நிறுவனங்கள் பயிற்சியளிக்கப்பட்ட நாய்களை வாடகைக்கு அமர்த்தி எலிகளை வேட்டையாடி வருகின்றன.

வாஷிங்டன், நியூயார்க் உள்ளிட்ட நகரங்களில் வீடுகள், ரெஸ்டாரண்ட்டுகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் நட்சத்திர ஹோட்டல்கள் போன்றவற்றில் எலிகளின் தொல்லைகள் அதிமாக இருப்பதாக கூறப்படுகின்றது.

அதனால், எலிகளை கொன்று அப்புறப்படுத்துவதற்கு ஆண்டுக்கு ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் சம்பளத்தில் ஆட்கள் தேவை என்று நியூயார்க் மேயர் அறிவிக்கும் அளவிற்கு நிலைமை மோசமாகியது.

அதையடுத்து, வாஷிங்டன் நகரிலுள்ள வணிக நிறுவனங்கள், நாய்கள் மற்றும் பூனைகளை வாடகைக்கு அமர்த்தி, எலிகளை வேட்டையாடும் பணியில் இறங்கியுள்ளன.

இந்நிலையில், பயிற்சியளிக்கப்பட்ட நாய்கள், எலிகளை விரட்டி விரட்டி வேட்டையாடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos