Tuesday, May 14, 2024
HomeLatest Newsஇராணுவ உளவுச் செயற்கைக் கோள் படுதோல்வி...!விஞ்ஞானிகளை சாடிய கிம் ஜாங் உன்...!

இராணுவ உளவுச் செயற்கைக் கோள் படுதோல்வி…!விஞ்ஞானிகளை சாடிய கிம் ஜாங் உன்…!

இராணுவ உளவுச் செயற்கைக் கோளை ஏவுவதில் ஏற்பட்ட குளறுபடிகள் மிகவும் மோசமான தோல்வி என வடகொரியா தெரிவித்துள்ளது.

கடந்த மே மாதம் 31 ஆம் திகதி செயற்கைக் கோளுடன் விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் கடலில் விழுந்தமையால் அது தோல்வியில் முடிந்தது.

இவ்வாறான சூழலில், கொரிய தொழிலாளர்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் இடம்பெற்றது.

அதில் பேசிய அதிபர் கிம் ஜாங் உன், செயற்கைக் கோளை ஏவுவதில் ஏற்பட்ட தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து விரைவில் வெற்றிகரமாக விண்ணில் செலுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், செயற்கைக் கோளை ஏவுவதில் தோல்வி ஏற்பட்டமை திட்டக்குழுவினர் பொறுப்பற்ற முறையில் பணியாற்றியமையே காரணம் என குறியுள்ளதுடன், திட்டக்குழுவினரின் செயற்பாட்டை கடுமையாக விமர்சித்துள்ளார்.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்திலிருந்து, வட கொரியா 100 ற்கும் அதிகமான ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டுள்ளது.

அவற்றில் சில உளவு செயற்கைக்கோள் மற்றும் பிற சக்திவாய்ந்த ஆயுதங்களை வடகொரிய அதிபர் கிம் இன் விருப்பப்பட்டியலின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.

மேலும் இந்த கண்காணிப்புக் குழு, தோல்வியுற்ற ஏவுதலில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அல்லது பிறரை சுத்திகரிப்பு அல்லது பணிநீக்கம் செய்யபடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News