இத்தாலி நாட்டில் அதிக பாரங்களைச் சுமக்கும் வகையில் புதிதாக ரோபோ ஒன்று வடிவமைக்கப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
இத்தாலியின் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி என்ற நிறுவனமே பாரம் தூக்கும் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது.
அத்துடன் இதற்கு ERGOCUB எனவும் அந்த நிறுவனம் பெயரிட்டுள்ளது.
தற்பொழுது, இந்த ரோபோ மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளதுடன் சோதனைக்கும் உட்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் இந்த ரோபோ விரைவில் பயன்பாட்டிற்கு வரும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.