Tuesday, December 24, 2024
HomeLatest Newsஉள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் நிதி அமைச்சின் அறிவிப்பு வெளியானது!

உள்ளூராட்சி தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தடுத்து வைத்துள்ளமையை தவிர்க்குமாறு நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பை தாம் மதிப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

கித்துல்கல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக் கொண்டு செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை ஒவ்வொருவரும் மதிக்க வேண்டும். அது அனைவரினதும் பொறுப்பாகும்.

அதன்படியே, நிதியமைச்சும் நீதிமன்ற தீர்ப்புக்கு அமைய செயற்படும்.

இந்தநிலையில், நீதிமன்ற தீர்ப்புக்கு இணங்க செயற்பட வேண்டும் என்பது தமது கடமையாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிடிய தெரிவித்துள்ளார்.

Recent News