Friday, May 3, 2024
HomeLatest Newsபழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு?

பழனி முருகன் கோயில் பஞ்சாமிர்தத்திற்கு தட்டுப்பாடு?

பழனி முருகன் மலை கோயிலில் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் பஞ்சாமிர்தம் விற்பனை அதிகரித்து தற்போது தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

பழனி  கோயில் பஞ்சாமிர்தம் பிரசித்தி பெற்றது. பழனி  வரும் வெளி மாநில, மாவட்ட பக்தர்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தற்போது பழனி மலை முருகன் கோயிலுக்கு சபரிமலை ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது.

அரையாண்டு விடுமுறை மற்றும் தைப்பூச யாத்திரை முருக பக்தர்களின் வருகையாலும் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் தேவஸ்தான கடைகளில் பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளது.

பழனி  கோயிலில் அரை கிலோ ரூ. 35 மற்றும் ரூ.40 என இரண்டு விதமாக பாட்டில், டின்களில் பஞ்சாமிர்தம் விற்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு 1.40 லட்சம் பஞ்சாமிர்த பாட்டில்கள் விற்பனையாகின்றன.

நேற்று காலை அதிக விற்பனை நடந்ததால் பஞ்சாமிர்த டப்பாக்கள் காலியாயின.பஞ்சாமிர்தம் கிடைக்காமல் பக்தர்கள் அவதிக்குள்ளாயினர்.

இணை கமிஷனர் நடராஜன் கூறுகையில் ‘தேவையைப் பொறுத்து கடைகளுக்கு பஞ்சாமிர்தம் வழங்கப்படும்’ என்றார்.

Recent News