Sunday, November 24, 2024
HomeLatest Newsபிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்?

பிரித்தானிய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம்?

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த செப்டெம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 0.2 சதவீதமாக சரிவைக் கண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, இன்னும் பல மாதங்களுக்கு, பொருளாதார வளர்ச்சியில் சரிவு காணப்படும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பிரித்தானியாவின் பொருளாதார வளர்ச்சி, செப்டெம்பர் காலாண்டில், 0.2 சதவீதமாக சரிவைக் கண்டிருப்பதாக, இவை மந்த நிலையின் ஆரம்பம் எனவும் அந்நாட்டின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தயாரிப்பு துறை உற்பத்தியில் ஏற்பட்ட சரிவு மற்றும் எலிசபெத் ராணியின் மறைவை முன்னிட்டு வழங்கப்பட்ட கூடுதல் விடுமுறைகள் ஆகியவை இந்த பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கணிசமான வரி உயர்வு மற்றும் செலவினக் குறைப்புகளை அரசு முன்மொழிந்ததால், டிசம்பருடன் முடிவடையும் நான்காவது காலாண்டில், பொருளாதாரம் மீண்டும் சரிவைக் காணும் எனவும் எதிர்பார்ப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

பிற செய்திகள்

Recent News