2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வரி விகிதங்கள் மேலும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று திறைசேரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு சமூக பாதுகாப்புக்காக 466 மில்லியன் ரூபாயும், நலத்திட்ட உதவிகளுக்கு 124 மில்லியன் ரூபாயும், கல்விக்கான நலத்திட்டங்களுக்கு 16 மில்லியன் ரூபாவும், சுகாதாரம் மற்றும் போஷாக்கு திட்டங்களுக்கு 10 மில்லியன் ரூபாயும், செலவிட வேண்டியுள்ளது.
அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு 1.1 டிரில்லியன் ரூபாவையும் அவர்களது ஓய்வூதியத்திற்காக மேலும் 3.2 பில்லியன் ரூபாவையும் அரசாங்கம் செலவிட வேண்டியிருக்கும்.
வீழ்ச்சியடைந்துள்ள அரச திறைசேரியை உயர்த்துவதற்காக புதிய வரிகளை விதிக்கும் உள்நாட்டு வருமான (திருத்த) சட்டமூலத்தை அரசாங்கம் கடந்த வாரம் வர்த்தமானியில் வெளியிட்டது.
நிதி அமைச்சரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட ஒகஸ்ட் மாத்திற்கான இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்ட வருமான யோசனைகளின் தொடர்ச்சியே இதுவாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.