Friday, May 3, 2024
HomeLatest Newsதீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா மோதல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

தீவிரமடையும் உக்ரைன்- ரஷ்யா மோதல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் 07 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகின்றது.

இந்நிலையில் ரஷ்ய படைகள் தற்போது ஏவுகணை டிரோன் மூலமாக தாக்குதல் நடத்தி வருகிறது.

இதேவேளை நேற்றையதினம் வோலின் நகரத்தில் இருந்து ஜபோர்ஜியா நகரம் வரையிலும் பல இடங்களில் ரஷ்ய ராணுவம் 36 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாக உக்ரைன் அதிபர் ஜெனல்ஸ்கி குற்றம்சாட்டி உள்ளார். இதில் 18 ஏவுகணைகளை உக்ரைன் ராணுவம் இடைமறித்து அழித்து விட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும் எஞ்சிய ஏவுகணைகள் நகரங்களுக்கு மின் சேவை வழங்கும் அமைப்புகளை குறி வைத்து நடத்தப்பட்டிருக்கிறது.

இதனால் நாட்டின் பல பகுதிகளிலும் மின் சேவை பாதிக்கப்பட்டுஇ இருள் சூழ்ந்துள்ளது. பல பகுதிகளில் குடிநீர் சேவையும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் கூறி உள்ளனர். இதற்கிடையே ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரில் இருந்து அதிகாரிகளும் பொதுமக்களும் உடனடியாக வெளியேற வேண்டுமென ரஷ்யா உத்தரவிட்டுள்ளது.
இப்பகுதியை மீண்டும் தங்கள் வசம் கொண்டு வர உக்ரைன் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளதால்இ அங்கு பயங்கர தாக்குதல் நடக்க வாய்ப்புள்ளதாக ரஷ்ய ராணுவம் எச்சரித்துள்ளது.

Recent News