Thursday, December 26, 2024
HomeLatest Newsபசுபிக் நாடுகளிற்கு 810 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

பசுபிக் நாடுகளிற்கு 810 மில்லியன் நிதி ஒதுக்கீடு!

அமெரிக்கா அண்மையில், பசுபிக் பிராந்திய நாடுகளிற்காக 810 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது பிரதானமாக அமெரிக்கா ஏற்கனவே ஒப்பந்தம் செய்துள்ள 14 பசுபிக் பிராந்திய நாடுகளிடையே செலவழிக்கப்படும் என குறிப்பிடப்படுகிறது.

சீனாவிற்கு எதிராக அதன் பிராந்திய அட்டூழியங்களை சமாளிப்பதற்காகவும் அமெரிக்கா இந்த தீவுகளுடன் பாதுகாப்பு ஒப்பந்தங்களில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னர் சீனா இதே பிராந்தியத்தில் அபிவிருத்திக்காக 2006 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரையில் 1.5 பில்லியன் டாலர் நிதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recent News