Thursday, December 26, 2024
HomeLatest Newsமூச்சின் வழி உள்ளிழுக்கும் கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக சீனா அங்கீகாரம்!

மூச்சின் வழி உள்ளிழுக்கும் கொரோனா தடுப்பு மருந்து: உலகில் முதல் நாடாக சீனா அங்கீகாரம்!

ஊசி இல்லாத மூச்சின் வழி உள்ளிழுக்கக் கூடிய கொவிட் தடுப்பு மருந்து பாவனைக்கு உலகின் முதல் நாடாக சீனா அங்கீகாரம் அளித்துள்ளது .

சீனா – தியான்ஜினை தளமாகக் கொண்ட கான்சினோ என்ற மருந்து நிறுவனம் இதனை தயாரித்துள்ளது .

இந்நிலையில் இந்தத் தடுப்பு மருத்துக்கு சீனா அங்கீகாரம் அளித்ததைத் தொடர்ந்து கான் சினோ பயோலொஜிக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 14.5 % வரை உயர்ந்தன .

சீனாவின் தேசிய மருத்துவப் பொருட்கள் நிர்வாகம் இந்த தடுப்பு மருந்தை கொவிட் தடுப்புக்கான மேலதிக ஊக்கி மருந்தாக அவசர கால பயன்பாட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளது .

இந்த மூச்சின் வழி உள்ளிழுக்கக் கூடிய கொவிட் தடுப்பு மருந்து மார்ச் 2020 இல் மனித பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது .

2021 பெப்ரவரியில் இந்த மருந்து அறிமுகம் செய்யப் பட்ட பின்னர் சீனா , மெக்ஸி கோ , பாகிஸ்தான்மலேசியா மற் றும் ஹங்கேரியில் பயன்படுத்தப்பட்டது . இந்த மருந்து நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும் .

அத்துடன் ஊசி இல்லாமல் பாது காப்பை அதிகரிக்க ஒரு வழியாகவும் இருக்கும் என கான் சினோ மருந்து நிறுவனம் கூறியுள்ளது.

Recent News