இலங்கையின் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய இன்று நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புக்கு இந்தியா, இலங்கை அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்களை கொடுத்ததாக வெளியாகியுள்ள ஊடக செய்திகளை முற்றாக நிராகரிப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அடிப்படையற்றதும் ஆதரமற்ற அந்த ஊடக செய்தி பொய்யானது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஸ்தாபிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக்கு உட்பட ஜனநாயக முறை, அதன் பெறுமதி மட்டுமின்றி அரசியலமைப்புச் சட்ட ஏற்பாடுகளுக்கு உட்பட்டு இலங்கையர்கள் தமது அபிலாஷை அடைவதற்கு இந்தியா அனைத்து சந்தர்ப்பங்களில் ஒத்துழைப்புகளை வழங்கும்.
இந்தியா மற்றுமொரு நாட்டின் உள்விவகாரங்களிலோ அல்லது ஜனநாயக செயற்பாடுகளில் எந்த சந்தர்ப்பத்திலும் தலையிடாது எனவும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.