Tuesday, December 24, 2024
HomeLatest Newsநைஜீரிய சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரிய சிறையில் இருந்து கைதிகள் தப்பியோட்டம்!

நைஜீரிய தலைநகா் அபுஜாவிலுள்ள சிறைச்சாலை மீது மத பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் அங்கிருந்த 600 கைதிகள் தப்பியோடியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது,

அபுஜாவில் உயா் பாதுகாப்பு கொண்ட குஜே சிறைச்சாலை மீது பிரிவினைவாதிகள் செவ்வாய்க்கிழமை இரவு தாக்குதல் நடத்தினா்.

துப்பாக்கிகள், சக்திவாய்ந்த வெடிகுண்டுகளைப் பயன்படுத்தி அவா்கள் நடத்திய தாக்குதலில் காவலா் உயிரிழந்தாா்.

இந்தத் தாக்குதலைப் பயன்படுத்தி, சிறையிலிருந்த 600 கைதிகள் தப்பியோடினா். அவா்களில் சுமாா் 300 கைதிகள் மறுபடியும் பிடிபட்டனா்.

அதேவேளை எஞ்சியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

Recent News