Thursday, April 25, 2024
HomeLatest Newsஇலங்கையில் தமிழ்நாடு உருவாகும்- மனோ எச்சரிக்கை!

இலங்கையில் தமிழ்நாடு உருவாகும்- மனோ எச்சரிக்கை!

கொழும்பில் எதிரணி கட்சிகளை அழைத்து காலிமுக போராளிகள் நடத்திய சர்வகட்சி மாநாடு தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

“எதிர்வரும் 9ம் திகதி, தாம் நடத்தும் கோட்டா எதிர்ப்பு போராட்டத்துக்கு, எதிரணியின் ஆதரவை, காலிமுக போராளிகள் கோரினார்கள். எமது சந்தோஷமாக ஆதரவை தெரிவித்தோம். அதேவேளை,நான் பேசும் போது தமிழ் பேசும் மக்கள் தொடர்பில் சில விஷயங்களை அனைவருக்கும் ஞாபகப்படுத்தினேன்.

நான் சொல்வதை , நீங்கள் ஏற்றுக்கொண்டால்தான், உங்களுக்கு எங்கள் ஆதரவு என நான் நிபந்தனை எதுவும் போடவில்லை. ஆனால், ஞாபகப்படுத்தினேன். போராளிகள் மட்டுமல்ல, அங்கே, சஜித், மைத்திரிபால, சம்பிக்க ரணவக, அனுர பிரியதர்ஷன, ரஞ்சித் மத்தும்பண்டார, ராஜித சேனாரத்ன, திஸ்ஸ ஆகிய நம்ம எதிரணியினரும் அமர்ந்து இருந்தார்கள்.

எல்லோருக்குமாகத்தான் சுத்த சிங்களத்தில் சொன்னேன். ஞாபகப்படுத்த வேண்டியவைகளை அவ்வந்த வேளைகளில் சொல்லிவிட வேண்டும், பாருங்கள்..! “புது மாற்றங்கள்” வருகின்றன என சொல்லப்படும் இது ஒரு கனாக்காலம். அப்புறம் இப்படி ஒரு சந்தர்ப்பம் வருமோ தெரியாது. வந்தாலும் நான் உயிருடன் இருப்பேனோ தெரியாது.

இன்னும் சொன்னேன்.”தம்பி, உங்கள் ஆவணத்தில் தேசிய இனப்பிரச்சினை பற்றி ஒன்றும் இல்லை. ஆனால், இங்கே உங்களில் ஒருவர் பேசும்போது, இது சிங்கள போராட்டமல்ல. தமிழ், முஸ்லிம்களும் சேர்ந்த போராட்டம் என்று கூறினீர்கள் அதுவரையில் மகிழ்ச்சி.” “அதேபோல் நீங்கள் அமைக்க விரும்பும் நாடும், சிங்கள-பெளத்த நாடாக இருக்க கூடாது. அது சிங்கள, தமிழ், முஸ்லிம் நாடாக இருக்க வேண்டும்.” “சிங்கள-பெளத்த நாடு என்று அமைக்க போனீர்கள் என்றால், இந்நாட்டில் இன்னொரு மூலையில் தமிழ்நாடும் அமையும். அது நியாயம்தானே?” என்று கேட்டேன். “ஆம்” என முன்னாலே இருந்தோர் தலையாட்டினார்கள்.

இன்னும் கொஞ்சமாக நிறைய பேசிவிட்டு உங்கள் போராட்டத்துக்கு எங்கள் “முழுமையான ஆதரவு” என அறிவித்து விட்டு வந்தேன் என அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Recent News