Saturday, November 23, 2024

ஷவர்மா சப்பிட்டா என்ன ஆகும்! உண்மை தெரியுமா? 

இளைஞர்கள் மத்தியில் தற்போது விருப்ப உணவாக மாறியுள்ளது ஷவர்மா எனும் துரித உணவு.

ஒரு ஷவர்மா சாப்பிட்டால் வயிறு நிறைந்து விடுவதைப் போன்ற உணர்வையும் தருவதுடன் நாவிற்கு ருசியாக அசைவ உணவு பிரியர்களின் முதன்மைப்பட்டியலில் இடம்பிடித்திருக்கிறது.

இதற்கிடையே கேரளாவில் ஷவர்மா உயிரைப் பறித்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், உண்மையில் அது ஆபத்தானதா என்பது குறித்து இங்கு காண்போம்.

ஷவர்மா என்னும் அரேபிய சொல் ‘சேவிர்மே’ எனப்படும் துருக்கி மொழியில் இருந்து வந்தது. இதற்கு அர்த்தம் சுற்றுதல். ஷவர்மா என்பது மேலை நாட்டு உணவாகும். லெபனானில் இந்த உணவு 15ஆம் நூற்றாண்டில் தோன்றியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு சவூதி, துருக்கி, சிரியா, ஈராக் ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா பயணிகளாக வந்தவர்கள் ஷவர்மாவை அறிமுகப்படுத்தினார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் பரவிய ஷவர்மா, தற்போது இந்தியா உட்பட கனடா போன்ற நாடுகளில் துரித உணவாக மாறியுள்ளது.

இந்தியாவின் கேரள மாநிலம் மலப்புரத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்பு விற்பனைக்கு ஷவர்மா கொண்டு வரப்பட்டது. மொய்தீன் குட்டி ஹாஜி என்பவர் இதனை விற்பனை செய்தார்.

சில நேரங்களில் சமையல் செயல்முறை சுகாதாரமற்ற நிலையில் நடைபெறுகிறது. விற்பனையாளர்கள் தனிப்பட்ட சுகாதாரத்தைப் பற்றி கவலைப்படுவதில்லை.

துரித உணவான ஷவர்மா அதிகபட்சம் பத்து நிமிடங்களுக்குள் சமைப்படுகிறது. இதில் 120 கிராம் கொழுப்பு நிறைந்துள்ளது. இதனால் இருதய நோய்கள், இரைப்பை குழாயில் பிரச்சனை உண்டாகும்.

மேலதிக தகவலை அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos