ஏப்ரல் முதல் வாரத்தில் மின்சார விநியோகத்தடையை குறைப்பதற்காக இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து 6,000 மெட்ரிக் தொன் டீசலை அதிக விலைக்கு கொள்வனவு செய்ய அரசாங்கம் எடுத்த தீர்மானம் காரணமாக இலங்கை மின்சார சபையின் நட்டம் மேலும் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இந்த கொள்வனவுக்காக மின்சார சபை, 2.11 பில்லியன் ரூபாவை இந்திய எரிபொருள் நிறுவனத்துக்கு செலுத்தவேண்டியேற்படடதாக மின்சார சபை தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபத்திடம் இந்த எரிபொருளை கொள்வனவு செய்திருந்தால், பாதி விலையில் இதனைப் பெற்றுக்கொள்ள முடியும் என அந்தத் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதில் சுமார் 6 மில்லியன் டொலர்கள், இந்திய நிறுவனத்துக்கு டொலர்களாக செலுத்தப்பட்டதுடன் உள்ளூர் கட்டணங்கள் மட்டுமே ரூபாவில் செலுத்தப்பட்டுள்ளது.