Monday, January 13, 2025

உங்களுக்கு அடிக்கடி தலை வலி வருதா அப்போ இதை நீங்க கண்டிப்பா பாக்கணும் 

நீங்கள் எழுந்த தருணத்திலிருந்து படுக்கைக்குச் செல்லும் வரை பகலில் நீங்கள் உண்ணும் உணவும் உங்கள் தலைவலியைத் தூண்டும்.காஃபின், தேநீர், ஆல்கஹால், உப்பு தின்பண்டங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகமாக உட்கொள்வதும் தலைவலியை ஏற்படுத்தக்கூடும்.
எந்த உணவு உங்களுக்கு தலைவலியை ஏற்படுத்துகிறது என்பதைக் கவனித்து, பகல் நேரத்தில் இதுபோன்ற உணவுகளை உட்கொள்வதைக்குறைக்க முயற்சிக்கவும். இதுதவிர, உணவைத் தவிர்ப்பது தலை வலியை அதிகரிக்கும்.

ஒவ்வொரு நாளும் சீரான உணவை உட்கொள்ள முயற்சிசெய்யுங்கள். பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்.

தலைவலியின் அறிகுறிகளைக் குறைக்க உங்களுக்கு உடற்பயிற்சி உதவும். ஏரோபிக், வலுப்படுத்துதல்மற்றும்நெகிழ்வுபயிற்சிகளைஉங்கள்வழக்கத்தில்இணைத்துக்கொள்ளுங்கள். இது உங்கள் தலைவலியை குறைப்பதோடு, நீங்கள் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது.

தலைவலி என்பது நம் வாழ்வின் ஒரு கட்டத்தில் நாம் அனைவரும் அனுபவித்திருக்கும் அவஸ்தையான வேதனை. வேலையில் நீண்ட நாள் கழித்து அல்லது காலக்கெடுவை நெருங்குவதற்கு முன்பு, தலையில் அழுத்தத்தை உணருவது இயல்பு.
ஆனால் சிலர் தினமும் தலைவலியுடன் போராடுகிறார்கள்.

தொடர்ச்சியான தலைவலி உங்கள் வேலைக்கு இடையூறு விளைவிக்கும் மற்றும்
கடுமையான மனநிலை மாற்றங்களுக்கு வழிவகுக்கும். இது ஒரு அடிப்படை சுகாதார நிலைக்கான அறிகுறியாக இருக்கலாம் அல்லதுவாழ்க்கை முறை சிக்கல்களை காட்டலாம்.

இதனைப்பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos