Monday, December 23, 2024

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு 8 வழிகள் || ஆரோக்கிய குறிப்புகள் || ஆரோக்கிய சமூகம்

காலையில் பற்களைத் துலக்காமல் வெறும் வயிற்றில் டீ குடிப்பதால் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?காலையில் எழுந்ததும் ஒரு கப் சூடான டீ குடித்தால் தான் பலருக்கு அன்றைய தினத்தை சிறப்பாக ஆரம்பித்த ஒரு சந்தோஷம் இருக்கும். ஒருவேளை டீ குடிக்காமல் இருந்தால் மனநிலை பாழாகிவிடும். அந்த அளவில் டீ பலரை அதன் சுவையால் அடிமையாக்கியுள்ளது. எப்படி காபி பிரியர்கள் இவ்வுலகில் அதிகம் உள்ளனரோ, அதேப் போல் டீ பிரியர்களும் ஏராளமாக உள்ளனர். அந்த டீ பிரியர்களுக்கு ஏற்ப பல வகையான டீக்களும் உள்ளன. பெரும்பாலான மக்கள் பெட் டீ குடிக்க விரும்புவார்கள்.

ஆனால் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும் என்று தெரியுமா? அதுவும் டீயை ஸ்ட்ராங்காக குடித்தால், அதனால் அதிக சேதம் ஏற்படும். டீயில் காப்ஃபைன் அதிகம் உள்ளது. இதை வெறும் வயிற்றில் குடிக்கும் போது அது தீங்கு விளைவிக்கும். நீங்கள் காலையில் எழுந்ததும் டீ குடிப்பவரானால், அது எம்மாதிரியான தீங்கை விளைவிக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

 கோடைகாலத்தில் இந்த பொருட்களை சாப்பிடுவது உங்களை பல நோய்களுக்கு ஆளாக்குமாம்… ஜாக்கிரதையா இருங்க…! பசியின்மை வெறும் வயிற்றில் டீ குடித்து வந்தால், அது பசியுணர்வை பாதிக்கும். மேலும் அளவுக்கு அதிகமாக டீ குடித்தால் பசியுணர்வு முற்றிலும் அழிக்கப்பட்டுவிடும். சிலர் ஒரு நாளில் பல முறை டீ குடிப்பார்கள். அத்தகையவர்களின் உண்ணும் உணவின் அளவைப் பார்த்தால் மிகக்குறைவாகவே இருக்கும். உண்ணும் உணவின் அளவு குறையும் போது உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட தொடங்கும்.

இதனைப் பற்றி மேலும் அறிந்துகொள்ள மேலே உள்ள link ஐ கிளிக் செய்யவும்.

Latest Videos