Sunday, April 13, 2025
HomeLatest News46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை!

46 தமிழ் அரசியல் கைதிகளுக்கு விரைவில் விடுதலை!

சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக நீதியமைச்சரும், ஜனாதிபதியின் சட்டத்தரணியுமான விஜேதாச ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்ததாக தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்து கூறுகையில்,

சிறு குற்றங்களுக்காக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 46 தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும் குறித்த சிறைக் கைதிகள் தொடர்பாக முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வாவின் அறிக்கைகளுக்காக காத்திருப்பதாக நீதியமைச்சர் என்னிடம் தெரிவித்தார்

மேலும், அண்மையில் இடம்பெற்ற நாடாளுமன்ற ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்தல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக நிறுத்துதல் மற்றும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு தொடர்பில் எங்களால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார் என்றும் கூறினார்.

Recent News