Thursday, January 23, 2025

4000 ஆண்டு பழமையுடைய பிரமிட் கஜகஸ்தானில் கண்டுபிடிப்பு….!

கட்டடக்கலை வடிவங்களில் அதிசயமான ஒன்றாகக் காணப்படும் பிரமிட்டுக்களுக்கு எகிப்து பெயர் பெற்றதாகவுள்ளது.இந் நிலையில் இது உலக அதிசயங்களில் ஒன்றாகவுள்ளதுடன் இவற்றைப் பார்வையிட உலகெங்கிலுமிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் திரள்கின்றனர்.

இந் நிலையில் தற்சமயம் மத்திய ஆசியாவிலும் கிழக்கு ஐரோப்பாவிலும் பரவி இருக்கும் நாடான கசக்ஸ்தானின் தலைநகரான அஸ்தானாவில்உள்ள அபய் மாவட்டத்தில் ஸ்டெப் பிரமிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கண்டுபிடிக்கப்பட்டவை 4000 வருடங்களு்கு முற்பட்டதாக ஆராய்ச்சிகளிலிருந்து வெளியாகியுள்ளது.

குறித்த ஆராய்ச்சியை குயில்யாவ் யுரேசியதேசிய பல்கலைக்கழக தொல்பொருட் பிரிவினர் அபய் மாவட்டங்களில் 2014 முதல் நடாத்தி வரும் ஆராய்ச்சிகளில் கண்டறிந்துள்ளனர்.அறுகோண வடிவ அடித்தளத்தில் 13 மீற்றர் நீளமுள்ள 8 வரிசைகளைக் கொண்டமைந்துள்ளதுள்ளதுடன் மத்தியில் ஒரு மையத்தைச் சூழ பல வட்டவடிவ கட்டுமானங்களுள்ளன.

மிக நுட்பமாக அமைக்களப்பட்டுள்ள இது மனித நாகரீகத்தில் கற்காலத்திற்கும் இரும்பு காலத்திற்கும் இடைப்பட்ட வெண்கல காலத்திற்குரியதாகும் என ஊகிக்கப்படுகின்றது.

Latest Videos