Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்...!62 வயதில் தந்தையாகி அசத்திய தாத்தா...!

ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள்…!62 வயதில் தந்தையாகி அசத்திய தாத்தா…!

முதியவர் ஒருவர் 62 வயதில் 3 பிள்ளைகளிற்கு தந்தையான சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியபிரதேச மாநிலம் சத்னா மாவட்டம் அதர்வேடியா குர்த் கிராமத்தில் கோவிந்த் குஷ்வாகா(62) என்பவர் தனது மனைவி கஸ்தூரி பாய்யுடன் (60) வசித்து வருகின்றார்.

தம்பதிகளிற்கு 18 வயதில் மகன் இருந்துள்ள நிலையில் திடீரென விபத்தில் மகன் உயிரிழந்தமையால் இருவரும் தவித்து வந்துள்ளனர்.

இதனால், மனைவி கஸ்தூரிபாய் தனது கணவர் கோவிந்திடம் 2 ஆவது திருமணம் செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அதையடுத்து, கணவர் 30 வயதான ஹீராபாய் என்ற பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார்.

இந்நிலையில், திருமணமாகி 6 வருடங்களுக்கு பின்னர் அவரின் இரண்டாவது மனைவி கர்ப்பம் அடைந்துள்ளார்.

ஹீராபாய்க்கு, கடந்த 12 ஆம் திகதி இரவு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அவருக்கு, மறுநாள் காலை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதன் ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

பிறந்த குழந்தைகள் பலவீனமாக இருந்த காரணத்தினால் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Recent News