Monday, January 27, 2025
HomeLatest Newsபிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 50 லட்சம் அபராதம்..!நியூசிலாந்தில் அதிரடி..!

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருந்தால் 50 லட்சம் அபராதம்..!நியூசிலாந்தில் அதிரடி..!

பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளுக்கு லட்ச கணக்கில் அபராதம் விதிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இன்றைய காலகட்டத்தில், பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதற்கு பல நாடுகள் தடை விதித்து வருகின்றன.

அந்த வகையில், நியூசிலாந்தில் கடந்த அக்டோபர் மாதம் ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக், உறிஞ்சுகுழல் போன்ற பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது அதன் இரண்டாம் கட்டமாக, பிளாஸ்டிக்காலான பைகள், தட்டுகள், ஸ்டிக்கர்கள் போன்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த தடையினை மீறி இந்த பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருக்கும் கடைகளிற்கு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிப்பதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இதனால், ஒவ்வொரு வருடமும் 150 மில்லியன் பிளாஸ்டிக் குப்பைகள் நிலத்தில் சேர்வதை தடுக்கலாம் என்று எதிர்பார்ப்பதாக அந்த நாட்டின் சுற்றுச்சூழல் துறை மந்திரி டேவிட் பார்க்கர் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News