சிங்கப்பூரில் இந்த ஆண்டு ஜனவரி முதல் நண்பர்களைப் போல் தொலைபேசியில் அழைத்து கடன் கேட்டவர்களிடம் 3700 க்கு மேற்பட்டோர் $12 மில்லியனை இழந்துள்ளதாக காவற்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
நண்பர்களை போல் ஏமாற்றி பிறருக்கு குறுஞ்செய்தி மற்றும் அழைப்பு மூலம் நிதியுதவிகாரியதாக பாதிக்கப்பட்ட நபர்கள் தெரிவித்துள்ளனர் குறிப்பாகசில மோசடிக்காரர்களின் தொலைபேசி இலக்கங்கள் +65 என்ற குறியீட்டுடன் காணப்பட்டதாகவும் ஏனையவை இத்தகைய குறியீட்டை கெண்டிருக்கவில்லை என கூறப்படுகின்றது.
மோசடிக்காரர்கள் தம்மை முதலில் அடையாளம் காண முடிகிறதா என்ற பாணியில் வினாவுகையில் பாதிக்கப்பட்டவர் ஏதாவது ஒரு நண்பரின் பெயரைச் கூறுகையில் அவரைப் போல் நடித்து கடனுதவி கோரி பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இதேவேளை மோசடிக்காரர் தற்போது தொலைந்த தொலைபேசிகளை கண்டுபிடிப்பதாக இணையத் தொடர்பு முகவர் அல்லது உணவக மேசையை முற்பதிவு செய்வதற்கான இணைய முகவரி என்ற போர்வையில் போலியான இணைய முகவரியை அனுப்புவதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
இத்துடன் பாதிக்கப்பட்டவர்களின் மென்பொருளை கைத்தொலைபேசியில் தரவிறக்கம் செய்வதன் மூலம் தொலைவிலிருந்து இயங்கும் அனுமதியை மோசடிக்காரர்கள் பெறுவர். பின்னர் மறைச்சொல் உள்ளிட்ட விவரங்களை இலகுவாகத் திருட முடியும்.
இவ்வாறு ஏமாற்றி பண மோசடி மேற்கொள்பவர்களிடமிருந்து அவதானமாக இருக்கும்படி காவற்துறை அறிவுறுத்தல் விடுத்துள்ளதுடன் மோசடிச் செயலிகளை பதிவிறக்கம் செய்வதைத் தவிர்க்குமாறும் ஆலோசனை வழங்கியுள்ளனர்.